புதிய அரசியலமைப்பின் மூலம் மாகாண சபை முறையை நீக்கி முற்றிலும் சிங்கள பௌத்த அரசியலமைப்பை கொண்டு வருவார்களோ என்ற சந்தேகம் தனக்கு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அரசாங்கத்திற்கு தெற்கிலே ஆதரவு குறைந்துவரும் நிலையில் மாகாணசபைத் தேர்தலை தள்ளிவைக்கவே முடிவு செய்வார்கள் என கூறினார்.
மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குவீர்களா என கேள்வியும் ஊடகவியாளர்களால் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இந்த கோரிக்கையை விடுத்தால் தன கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் சம்பந்தமாக எந்த வித பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.