வடக்கில் நடத்திய போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரான போராட்டமாக சித்தரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றது என கூறினார்.
மீனவர்களுடைய போராட்டத்தினை வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாட்டில் பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த தடைசட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு ஒரு இந்திய மீனவரின் உயிர் பிரிந்திருக்காது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும் இந்த சட்டத்தினை மீறி உள்நாட்டிலும் தொழில் செல்பவர்களுக்கு எதிராகவும் இந்த சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.