ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென அவ்விடத்துக்கு வந்த மர்மநபர் ஆளுநரின் பின்னந்தலைக்கு தாக்கியுள்ளார்.
அதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை தடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட வெறுப்புக் காரணமாக நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன்,இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















