அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இரசாயன உரப் பாவனையைத் தடை செய்யும் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சேதன பயிற்செய்கையை பயன்படுத்துவதற்கான முடிவு மக்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது என்றும் அது தேர்தல்வாக்குறுதி அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பதுளையில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எவரும் விரும்பாத தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளதாகவும், சுயநலமாக இந்த தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் எவ்வாறான குறைபாடுகள் இருந்தாலும் ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் என்றும் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு அறுவடை குறைவாக இருந்தால், ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.