ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணி, முரண்பாட்டின் வரைவிலக்கணம் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விமர்சித்துள்ளார்.
நாட்டில் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது என்றால் எதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் குற்றவாளி ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே இருக்கிறது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.