அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள குறித்த புத்தகத்தில் அவர், 2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், பெயரிடப்படாத அரசியல்வாதி தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளதாக கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஒபாமா காலத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான திருமதி கிளிண்டனின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரான அபெடின் காணப்படுகின்றார்.
அவர் 2001-09 க்கு இடையில் நியூயோர்க்கிற்கான அமெரிக்க செனட்டராக இருந்த கிளிண்டனுக்காக தனது பணியை மேற்கொள்ளும்போது இந்த பாலியல் வன்கொடுமை இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
45 வயதாகும் ஹூமா அபெடின், செனட்டரின் அடையாளத்தையோ அல்லது அவரது கட்சியையோ வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.