ஐந்து தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் நிபுணர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து, பைசர் தடுப்பூசியை 05 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்றுவதற்கான அவசர பயன்பாட்டு அனுமதியை, அடுத்த சில வாரங்களுக்குள் வழங்குவதற்கான வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வயது பிரிவைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி பாதுகாப்பானதென்பதை, மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் காண்பிப்பதாக அதன் உற்பத்தி நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
12 மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசியை அமெரிக்கா முன்னரே ஏற்றிவருகின்றது. இந்தநிலையில், தற்போதைய புதிய தீர்மானத்தின் கீழ் 28 மில்லியன் அமெரிக்க சிறுவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
இந்த புதிய தீர்மானத்துக்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை அத்துடன் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப்பிரிவு ஆகியவற்றின் மேலதிக அனுமதியைப் பெறவேண்டியுள்ளது.