ராஜபக்ஷ அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது இதுவே இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ”இன்று ஆசிரியர்களின் கல்வித்தரம் அதிபர்களின் தரம் என்பவற்றுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படாமல் இன்று ஒரு போராட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது .
ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது இதுதான் இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது ஒரு இரவிலேயே அனைத்து விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என்று சொன்னால் அவர்கள் எவ்வாறு மாறமுடியும்.
குறிப்பாக உலகில் இயற்கை விவசாயம் இயற்கையான உணவு மனிதனுக்கு முக்கியமானது இது உலக அரங்கில் தற்போது வளர்ந்து வருகின்றது இது இலங்கையிலும் தற்போது வளர்ந்து வருகின்றது அதற்காக நாங்கள் குரல் கொடுத்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்-