முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் ஊடான வீதி துரிதகதியில் சீரமைக்கப்பட்டு வருகின்றது.
நாடெங்கிலும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொடர்ச்சியான முறையில் பெய்த மழை மற்றும் காற்றினால் குளம், கடலின் நீர்மட்டமானது வழமையை விட உயர்வடைந்திருந்தது.
இதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் குறித்த பாலம் பகுதியளவில் சேதமடைந்தது. இதனால் குறித்த பாலத்தினுடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
பின்னர் தற்காலிக வீதி புனரமைப்பின் மூலம் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. இந்நிலையில் குறித்த பாலம் திருத்த வேலைகள் மிக துரித கதியில் இரவு பகலாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












