மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்துவோம் மீண்டும் திறைசேரி ஒரு ரூபாய் ஏணும் திருப்பி அனுப்பஅனுமதிக்கமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகளுக்கான விதை பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்பு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 50,000 இஞ்சி விவசாயிகளுக்கும் 3000 உளுந்து விவசாயிகளுக்கும் 2500 பாசிப்பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் 7000 கூட்டெரு உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள விவசாயிகளையும் வலுப்படுத்துவது எமது நோக்கமாக இருக்கின்றதுமட்டகளப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குறித்து பல்வேறு முன்மொழிவுகளை நான் அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளேன்.
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பாரிய அளவில் உள்வாங்கப்பட உள்ளது என தெரிவித்தார்