பிரெக்ஸிட் அமைச்சர் லோர்ட் ஃப்ரோஸ்ட், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய திரும்பப்பெறுதல் ஒப்பந்தம் மற்றும் வடக்கு அயர்லாந்து நெறிமுறை தொடர்பான பிரித்தானியாவின் பேச்சுவார்த்தைகளுக்கு அவர் தலைமை தாங்கினார்.
பிரெக்ஸிட் இப்போது பாதுகாப்பானது என்றாலும், தற்போதைய பயணத்தின் திசையைப் பற்றிய கவலைகள் இருப்பதாக தெரிவித்து அவர் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் உடன்படவில்லை என்றபதனால் ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தனது ராஜினாமாவை ஒப்படைத்ததாக மெயில் ஒன் சண்டே ஊடகம் செய்தி வெளியிட்டது.
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய ஏற்பாடுகள் தொடர்பாக லோர்ட் ஃப்ரோஸ்ட் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
இது 2019 இல் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட வடக்கு அயர்லாந்து நெறிமுறையின் கூறுகளை உள்ளடக்கியது.
பிரித்தானியாவில் இருந்து வடக்கு அயர்லாந்திற்கு பொருட்களை அனுப்புவதை மிகவும் கடினமாக்கும் வகையில் அமைந்த இந்த நெறிமுறை பலரால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்க்கது