புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக நான்காவது தடுப்பூசியை வழங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுநோய் நிபுணர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நான்காவது தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளனர்.
இந்த திட்டத்தை வரவேற்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நஃப்டலி பென்னட், அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
ஒமிக்ரோன் தொற்று உறுதியான முதலாவது மரணம் எங்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இஸ்ரேலில் குறைந்தது 340 ஒமிக்ரோன் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.