வடக்கு மியன்மாரில் ஜேட் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேர் காணாமல் போயுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோத ஜேட் சுரங்கத் தொழிலாளர்கள் என நம்பப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் 100 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
சுரங்க மண் சரிவு விபத்தில் சிக்கி மாயமாகியுள்ள 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.