அரசின் இயலாமையை மூடிமறைக்வே அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி, மாறியமைக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, இந்த நாட்டுக்கு மக்கள் இந்த மாற்றத்தை எதிர்பாக்கவில்லை என குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ண முடியாத நிலைக்கு வந்துள்ள நிலையில் அரசாங்கம் டொலர்களுக்காக வெளிநாடுகளில் பிச்சை எடுக்கின்றது என குற்றம் சாட்டினார்.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் வெளிநாடுகளுக்குச் சென்று டொலர் பிச்சை எடுத்ததில்லை என்றும் அசோக அபேசிங்க சுட்டிக்காட்டினார்.