இலங்கையில் இதுவரை 48 ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் டிசம்பர் 12ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சேகரிக்கப்பட்ட 177 மாதிரிகளில், 41 பேருக்கு ஒமிக்ரோன் மாறுபாடு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் சிலர் சிகிச்சையளிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் மற்றவர்கள் சிகிச்சையிலும் தனிமைப்படுத்தலிலும் இருப்பதாக வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.