கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறும் இந்த நிழ்வில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வினை அடுத்து புகைப்படக் கண்காட்சியொன்றையும் இலங்கைக்கான சீன தூதரகம், விளையாட்டு அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
மேலும் இதன்போது, ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் உல்லாச நடைபாதை சில தினங்களுக்கு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலத்திற்கு எதிரில் உள்ள முகப்பின் ஊடாக இதற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.