சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சீனாவில் மருத்துவம் கற்கும் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுற்றுலா, முதலீடு, கொரோனா நிவாரணம் மற்றும் கொரோனா பிந்தைய ஏற்பாடுகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
Had a very pleasant meeting with the Foreign Min of #China. Discussions centered around the logistics of facilitating the return of the many #lka med students to China. Also discussed were a host of issues inc Tourism, investments, #COVID19SL relief & post Covid preparedness. pic.twitter.com/ksqSYQWc7X
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) January 9, 2022