கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தினால் திருவள்ளுவர் விழா இரு நாட்களாக நடைபெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் சிவபாலன் தலைமையில் நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முனைவர் தணிகாசலம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வைத்தியகலாநிதி மா. ஜெயராசா தமிழ்ச் சங்கத்தின் வாழ் நாள் தலைவர் இறைபிள்ளை மற்றும் விருந்தினர்களும் நிகழ்த்தினர்
அதன் பின் கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்தியத்துறையிலும் கல்வித்துறையிலும் சிறந்த பணிகளை ஆற்றிய வைத்தியகலாநிதி குகராஜா மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி யின் முதல்வர் மீனலோஜினி ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்.
குறித்த நிகழ்வில் வைத்தியர்கள்பாடசாலையின் முதல்வர்கள் முன்னாள் முதல்வர்கள் திணைக்கங்களின் தலைவர்கள் கலைஞர்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.