நோய்த்தொற்றுகளின் பெரும் எழுச்சிக்கு வழிவகுத்த ஓமிக்ரோன் மாறுபாட்டின் புயலின் மூலம் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்த அயர்லாந்து அதன் அனைத்து கட்டுப்பாடுகளையும் இன்று (சனிக்கிழமை) இரத்து செய்ய உள்ளது.
இதுகுறித்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தொலைக்காட்சி உரையில், ‘நாங்கள் ஓமிக்ரோன் புயலை எதிர்கொண்டோம். அதில் பூஸ்டர் தடுப்பூசிகள் நாட்டின் நிலைமையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன.
சில இருண்ட நாட்களில் நான் இங்கே நின்று உங்களிடம் பேசியிருக்கிறேன். ஆனால் இன்று நல்ல நாள்.
எனினும், பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் போன்ற சில நடவடிக்கைகள் பெப்ரவரி மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும்.
உட்புற மற்றும் வெளிப்புற அரங்குகளில் உள்ள திறனும் முழுத் திறனுக்குத் திரும்பும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆறு நாடுகளின் ரக்பி ச ம்பியன்ஷிப்பிற்கு முழுக் கூட்டத்திற்கு வழி வகுக்கிறது’ என கூறினார்.
கடந்த வாரம் ஐரோப்பாவில் இரண்டாவது கொவிட் தொற்று வீதத்தை கொண்டிருந்த அயர்லாந்து, பூஸ்டர் தடுப்பூசிகளை அதிக அளவில் எடுத்துக்கொண்டதன் விளைவாக, தற்போது தீவிர நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கையை முந்தைய உச்சத்தை விட குறைவாக வைத்துள்ளது.
ஐரோப்பாவின் கடினமான முடக்கநிலை ஆட்சிகளில் ஒன்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அயர்லாந்தின் விருந்தோம்பல் துறை இந்த முடிவை வரவேற்றது.
பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றி, மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள் இனி இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டியதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்தது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் கொவிட் அலை தாக்கியபோது ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது அல்லது தடுப்பூசிக்கான ஆதாரத்தை வாடிக்கையாளர்களிடம் கேட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இரவு விடுதிகள் 19 மாதங்களில் ஒக்டோபர் மாதத்தில் முதல் முறையாக தங்கள் கதவுகளைத் திறந்தன. ஆறு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மூடப்பட்டன.