நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது இன்று(சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. மொத்தமாக 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பேர் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 2,943 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறுகிறது.
இந்த பரீட்சையில் தமிழ் மொழியில் 85 ஆயிரத்து 446 பேரும், சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 63 பேரும் தோற்றியுள்ளனர்.
புலமை பரிசில் பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.15 வரைக்குமான 45 நிமிடங்களை கொண்டிருக்கும். இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 10.45 மணிமுதல் நண்பகல் 12 மணி வரைக்குமான 1 மணி நேரம் 15 நிமிடங்களை கொண்டிருக்கும்.
இந்தநிலையில் மலையகத்திலும் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.
அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமையினை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடதக்கது.