நாடளாவிய ரீதியாக முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கருத்து வெளியிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவம் குறித்து தற்போது நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக கூறினார்.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கையே அவசியம் என்பதனால் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இருப்பினும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சில தடைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இலங்கையில் 124 நாட்களுக்குப் பின்னர் முதன்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,000க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.