ரஷ்ய படையெடுப்பு உடனடியாக நிகழலாம் என்ற மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பல நாடுகள் தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் தமது நாட்டு மக்களுக்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தூதரக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் தூதரகத்தை விட்டு வெளியேற அமெரிக்கா உத்தர பிறப்பித்துள்ளது.
உக்ரைனின் எல்லையில் 100,000 துருப்புகளைக் குவித்துள்ள ரஸ்யா, படையெடுப்பதற்கான எச்சரிக்கைகளை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.
இதேநேரம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக, யுத்த செலவுகளை சுட்டிக்காட்டி அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் எச்சரிகை விடுத்திருந்தார்.
உக்ரேனிய ஜனாதிபதியும் அவரது பங்கிற்கு சவாலுக்கு தயார் என்று கூறியுள்ள நிலையில், படையெடுப்பு எந்த நேரத்திலும் நிகழலாம் என்றும், வானிலிருந்து குண்டு மழை பொழியலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.