தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த மற்றும் கீழ்ப்படிதலுள்ள எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரியருக்கு அதிக பங்கு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மாணவர், ஆசிரியர் மற்றும் போர்வீரர் நினைவிடம்’ திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்தார்.
பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்து, தொந்தரவில்லாத அமைதியான சமுதாயத்தை அரசங்கம் உருவாக்கியுள்ளது என கமால் குணரத்ன கூறினார்.
ஆகவே பதிலுக்கு, மாணவர்கள் அனைவரும் இந்த நாட்டிற்கும், அதன் மக்களுக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கும் சேவை செய்வீர்கள் என நமப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.