கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் சுமார் 80 சதவீதமானோர் வெவ்வேறுநோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசேட வைத்திய நிபுணர் நந்தன திக்மதுகொட இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இதில் பிரதானமானது இதய நோய் ஆகும். சாதாரண நெஞ்சு வலி ஏற்படும் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
ஆனால் நெஞ்சு வலி ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வது அத்தியாவசியமானதாகும்.
இதனை தவிர நுரையீரல் பாதிப்பு, கொரோனா தொற்றுக்குள்ளாகி 3 – 6 மாதங்களுக்கு மணம் மற்றும் சுவையை உணர முடியாமை, நரம்பு பிரச்சினை, இரத்தம் உறைதலால் உடல் உறுப்புக்கள் செயலிழத்தல், ஞாபக மறதி, தூங்கும் நேரம் அதிகரித்தல் அல்லது குறைடைதல், மன உளைச்சல், உடல் மற்றும் தசை வலி உள்ளிட்ட நோய் நிலைமைகளும் கொரோனா தொற்றின் பின்னர் ஏற்படக் கூடும்.
இவ்வாறான நோய் நிலைமைகளை அறிவித்து தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களில் கொரோனா தொற்றுக்கு பின்னரான நோய் நிலைமைகளுக்கான விசேட சிகிச்சை வழங்குவது தொடர்பான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே இதுபோன்ற அறிகுறிகள் எவையேனும் தென்பட்டால் அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.