ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சுமார் 600 ரஷ்ய படையினர் உக்ரைனிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உக்ரனின் கியிவ் பகுதியிலுள்ள இராணுவ விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் சுமார் 13 ஆயிரம் பேர் நேற்று மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் துணை பிரதமர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்க நேட்டோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி லண்டனில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.