மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின் 52வது மாநாடு இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இதயக்கமலன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் சாந்தகுமார மீகம,உதவி செயலாளர் திலகரட்ன யட்டவர,நிர்வாக குழு உறுப்பினர் சோபா ரட்ன,தபால் சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்த ஆண்டுக்கான கூட்டத்தின் கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு சங்க உறுப்பினர்களினால் அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.
சங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இங்கு முன்வைக்கப்பட்டன.
அத்துடன் இதன்போது 2022 மற்றும் 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவுக்கான தேர்தலும் நடாத்தப்பட்டு உறுப்பினர்கள் வாக்களிக்கும் நிகழ்வும் நடைபெற்றதை தொடர்ந்து புதிய ஆண்டுக்கான நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டனது.
இதனடிப்படையில் புதிய தலைவராக மீண்டும் முன்னாள் தலைவர் என்.இதயக்கமலன் தெரிவுசெய்யப்பட்டதுடன் புதிய செயலாளராக ஜி.ரஞ்சித் தெரிவுசெய்யப்பட்டார்.
அத்துடன் பத்துப்பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர்களும் வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டதுடன் பொருளாளர் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து புதிய ஆண்டுக்கான மாநாடு தொடர்ந்து நடைபெற்றதுடன் பால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தினனால் பல கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன.