உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசாங்கம் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
யாழில் உள்ள பௌத்த விகாரைகளுக்கான பிரதமரின் விஜயம் குறித்த கேள்விக்கு பதில் வழங்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
கடந்த காலத்தைப்போன்று இன்றும் வடக்கில் புத்தர் சிலைகளை வைப்பது பௌத்த தூபிகளை நிர்மாணிப்பது என கூறி, சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் விசேடமாக எந்த விடயங்களையும் கூறவில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.
தயவு செய்து மேலும் இரண்டு வருடங்களை தாருங்கள் என மக்களிடம் கோரும் முகமாகவே ஜனாதிபதியின் உரை அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.