தற்போது பொருளாதார நோய் பிடித்திருக்கின்றது. பொருளாதார நோய்க்கும் மேலாக எங்களது உரிமையைப் பெறுவதற்கான நோய் இருக்கின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கோ.கருனாகரம் தெரிவித்துள்ளார்.
நாட்டு வைத்தியர் க.விஸ்வலிங்கம் எழுத்திய நோய் நிவாரணி எனும் நூல் வெளியீட்டு விழாவும், சித்த வைத்திய முகாமும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு மாவட்டம் பழுகாமம் சிவன் அலய முன்றலில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”நோய் நிவாரணி என்ற புத்தகம் உண்மையிலேயே எங்களது தமிழ் இனத்துடன் சம்பந்தப்பட்ட புத்தகமாக நான் பார்க்கின்றேன்.
7 தசாப்தங்களுக்கு மேலாக அகிம்சைப் போராட்டங்கள், ஆயுதப் போராட்டங்கள் நடந்தி 2009ஆம் ஆண்டு எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் கூட அந்த நோய்க்கான நிவாரணம் கிடைக்காமல்தான் நாங்கள் இருக்கின்றோம்.
அந்த நிவாரணத்தை நாங்கள் எங்கு யாரிடம் இருந்து பெறுவது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற ஏனைய கட்சிகள்கூட என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில்தான் மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கங்கள் இந்த நோக்கி எங்களது உரிமையைப் பெறுவதற்கான, பாதிக்கப்பட்டிருக்கும் இந்த தமிழினத்தை நோக்கி ஒரு நிவாரணத்தை கூட மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் எந்தவொரு அரசாங்கமும் எந்த ஒரு ஜனாதிபதியும் எந்த நிவாரணத்தையும் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றார்.
இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தற்போதைய காலகட்டத்தில் நாட்டிலே இந்த நோய்க்கான நிவாரணத்தைக் கொடுப்பார என்று பார்த்தால் அது முயடியாமல் இருக்கின்றது. பொருளாதார நோய் பிடித்திருக்கின்றது. பொருளாதார நோய்க்கும் மேலாக எங்களது உரிமையைப் பெறுவதற்கான நோய் இருக்கின்றது. அந்த வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு இன்று பல வழிகளில் அழுத்தங்கள் இருக்கின்றன. சர்வதேச அழுத்தம் இருக்கின்றது.
ஐக்கிய நாடுகள், மற்றும் இந்தியாவின் அழுத்தம் இருக்கிறன. அதைவிட இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தான் ஒரு பௌத்த சிங்கள மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, என்று தனக்கு 69 லட்சம் சிங்கள மக்கள் தன்னை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கி இருக்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் இந்த ஜனாதிபதிக்குகூட அந்த 69 லட்சம் மக்களும் இந்த ஜனாதிபதிக்கு ஏன் வாக்களித்தோம் என்று வெட்கப்படுகிறோம் என தெரிவித்து தற்போது வீதிக்கு இறங்கியுள்ளார்கள்.
இவ்வாறு இந்த நாட்டின் அரசும் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி அவர்களும் இருந்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நோயிக்கு நிவாரணம் பெறுவதற்காக அழைத்திருக்கின்றார்கள். நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமான தமிழீழ விடுதலை இயக்கம். தமிழீழ விடுதலை இயக்கம் 50 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டக்களத்தில் இருந்த நாங்கள் இந்த தமிழீழ விடுதலை இயக்கம் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருந்து எங்களது கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நிவாரணத்தின் பக்கத்தில் இருந்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தம் காரணமாக கடந்த 15ஆம் தேதி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேசுவதற்கு அழைத்திருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமான தமிழீழ விடுதலை இயக்கம் நாங்கள் அதை மறுதலித்து இருக்கின்றோம். என்ன காரணம் என்றால் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுவரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் இனத்திற்கு ஒரு இனப் பிரச்சினை இருக்கின்றது அதற்கான ஒரு அரசியர் தீர்வு வேண்டும் என அவர் எந்த இடத்திலும் கூறவில்லை.
அப்படியானவருடன் ஏன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நாங்கள் பேச வேண்டும் என்பதுதான் எங்களது முக்கியமான கேள்வி. அதற்கும் மேலாக ஒரு அரசியல் தீர்வை இந்த நாடாளுமன்றத்தின் ஊடாக கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அரசியலமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் தேவை. ஆனால் அவருடன் இருந்தவர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களுக்கு 30 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று அவரை விட்டு வெளியேறிச் சென்ற போது அவரின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கு இல்லை. இதனால் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியாத நிலையில் எங்களுனுடன் பேசி எப்படி ஒரு அரசியல் தீர்வைக் கொண்டு வரப்போகின்றார். அந்த ரீதியில் அவருடன் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை.
கடந்த 15ஆம் திகதி எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார். அதன் இணைப்பாளராக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் இருக்கின்றார். இந்நிலையில் அதே 15ஆம் திகதி இலங்கையில் இனப்படுகொலை ஒருபோதும் இடம்பெறவில்லை. ஜனாதிபதி கூட்டமைப்பு பேச்சு நல்ல ஆரம்பம் என்கின்றது அரசு என வெளிநாட்டமைச்சரின் செயலாளர் ஒரு அறிக்கை விடுகின்றார்.
அப்போ இந்த நாடகம் எதங்கு. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் பெரும்பாலான பிரதிநிதிகளை அழைத்துப் பேசி கண்டேன் என்று எங்களை ஒரு பகடைக்காயாக மாற்றி சர்வதேசத்தில் இருந்துவரும் அழுத்தத்தை குறைப்பதற்காக சர்வதேசம் அழுத்தம் கொடுக்கும் போது நாங்கள் உள்நாட்டில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உடன் பேசிக் கொண்டிருக்கின்றோம் எனக்கூறி அழுத்தத்தை நீங்கள் தர வேண்டாம் நாங்கள் எங்களது பெரிய பிரச்சினையை நாங்கள் உள்ளேயே பேசி தீர்த்துக்கொள்வோம் கொள்ளுவோம் என்று சொல்வதற்காக இப்படி ஒரு நாடகத்தை ஆடுகின்றார் என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாக இருக்கின்றது” என தெரிவித்தார்.