132 பேருடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் தெற்கு குவாங்சி மாகாணத்தில் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
போயிங் 737 என்ற விமானத்தில் 123 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் இருந்ததாக சீனாவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படாத நிலையில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
விபத்துக்குள்ளான பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்டில் விமான விபத்து ஒன்று இடம்பெற்று அதில் 42 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.