உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமிக்கு அருகில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்ய ஏவுகணை தாக்கியதால் ரஷ்ய ஏவுகணை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால், சுமிக்கு அருகில் உள்ள நோவோசெலிட்ச் வசிப்பவர்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் 50 டன் எடையுள்ள விஷ வாயு தொட்டி சேதமடைந்ததாக பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ ஸிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது அம்மோனியா மேகத்தை உருவாக்கியது. மேகம் சுமார் 2.5 கிலோ மீற்றர் (1.5 மைல்) பகுதியை பாதித்தது.
சுமிகிம்ப்ரோம் இரசாயன ஆலையில் அவசர பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். அம்மோனியா, உரம் தயாரிக்கப் பயன்படுகிறது மற்றும் இது அரிக்கும் தன்மை கொண்டது.
இந்த தாக்குதலில் இதுவரை ஒரு தொழிலாளி காயமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீதான போரில் இதுவரை 15,000 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் 476 டாங்குகள், 200 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள், ஆளில்லா விமானங்கள், 1,487 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பட்டுள்ளது.