இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) வெளியிடப்பட்ட இறுதி வீரர்களின் பட்டியலின்படி, டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு 12 இலங்கை வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) இன்று வெளியிட்ட 2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL2026) ஏலத்தின் வீரர்களின் இறுதிப் பட்டியலில் மொத்தம் 12 இலங்கை நட்சத்திரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரன மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்,
இவர்கள் அனைவரும் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி இந்திய ரூபாவுக்கு இடம் பெற்றுள்ளனர்.
அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களான பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் மற்றும் முன்னாள் தலைவர் தசுன் ஷனக ஆகியோரும் ஏலத்தில் நுழைந்துள்ளனர்.
மேலும் வளர்ந்து வரும் வாய்ப்புகளான சரித் அசலங்க, துனித் வெல்லலகே மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரும் ஏலத்தின் பட்டியிலில் உள்ளனர்.
குசல் பெரேரா, டிராவீன் மேத்யூ மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகிய மூன்று மேலதிக வீரர்கள் இலங்கையின் பிரதிநிதித்துவத்தை நிறைவு செய்கிறார்கள்.
பட்டியலிடப்பட்ட 12 இலங்கை வீரர்கள்:
- வனிந்து ஹசரங்க
- மதீஷ பத்திரன
- ஹீஷ் தீக்ஷன
- பத்தும் நிஸ்ஸங்க
- தசூன் சானக்க
- குசல் மெண்டீஸ்
- குசல் பெரேரா
- விஜயகாந்த் வியாஸ்காந்த்
- சரித் அசலங்க
- துனித் வெல்லலாகே
- டிராவின் மேத்யூ
- பினுர பெர்னாண்டோ
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 2:30) ஏல நடவடிக்கைகள் தொடங்கும்.
ஏலத்தின் போது பத்து அணிகளும் 77 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.














