சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசம்பர் 22 திங்கட்கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வியாண்டு 2025 டிசம்பர் 26 வெள்ளிக்கிழமையுடனும் நிடைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கு அமைவாக சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.27 ஆம் திகதி முதல் 2026.01.04 ஆம் திகதி வரையும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்து பாடசாலைகளும் 2026 ஜனவரி 05 திங்கட்கிழமை அன்று ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
















