இரண்டு கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்கும் பணி தொடங்கியுள்ளது.
38 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதன் பின்னர் எரிபொருளை இறக்கும பணிகள் தொடங்கியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதில் விமான சேவைக்கு தேவையான எரிபொருள் மற்றும் டீசல் என்பன அடங்குவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் பருவ மழைக்கு முன் நிலக்கரி தேவையான நிலக்கரியும் கிடைத்துள்ளது என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.