வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
அத்தியவசிய பொருட்களின் விலைஏற்றம்,தட்டுப்பாடு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொருட்களின் விலைஅதிகரிப்பு காரணமாக இன்று அனைத்து மக்களும் கடும் பாத்திப்புக்களை சந்தித்து வருகின்றனர். இதனால் வங்கி வலையமைப்பிற்கும் பாதிப்பு ஏற்ப்படும் அபாய நிலமை காணப்படுகின்றது.
எனவே நாட்டையும், மக்களையும் படுகுழியில் தள்ளிய இந்த அரசு உடனடியாக பதவி விலகவேண்டும். இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டியது அனைவரது தலையாய கடமை அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். என தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊழல்களால் உழைத்த பணத்தை மக்களின் உடமையாக்கு,அரச நிறுவனங்களின் விற்பனையை நிறுத்து, வாழ்க்கை செலவை குறைத்திடு, வெளிநாட்டு பண கறுப்பச்சந்தை மாபியாவை தடைசெய், விவசாயகளிற்கு நிவாரணம் வழங்கு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்