ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணை நடத்த 20 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் அவிசாவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றும் அடங்குகின்றது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மூவர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













