எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய பதுளை – பசறை பிரதான வீதியின் யூரி தோட்டப் பகுதியில் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் பலப்பிட்டிய நகர் பகுதியிலும் பொரலந்தை, வெலிமடை, ரெந்தபோல மற்றும் பூனாகலை தோட்டப் பகுதிகளிலும் இன்று காலை தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் உடபுஸ்ஸலாவை – எம்.எஸ் தோட்டம் – கோல்டன் பகுதியில் தோட்ட மக்களால் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் அபயபுர சுற்று வட்ட சந்தியிலும் நுவரெலியா, பதுளை உள்ளிட்ட பகுதிகளிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வலஸ்முல்ல, நெலுவ, இராஜாங்கணை உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகாமையிலும் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, கண்டி, நுவரெலியா, மாத்தளைஎ இரத்தினபுரி, ஹட்டன், தோப்புவ, சிலாபம், கேகாலைஎ கம்புறுபிட்டிஎ அக்குரஸ்ஸஎ அம்பலாங்கொடைஎ எல்பிட்டி, அநுராதபுரம், மினுவாங்கொடை, கெஸ்பேவ, திஸ்ஸமஹாராம உள்ளிட்ட நகரங்களில் நேற்றும் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.