பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமையாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் அம்பியூலன்ஸ், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்க கூடாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுத்தாமல் முன்னெடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலுக்கு எவரும் வருகை தரமுடியாத வகையில் அனைத்து பக்கத்திலும் பொலிஸார் இரும்புவேலிகளை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.