மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலின்போது புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவித்த மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரச நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.