எஸ். ஹரியதர்ஷனி
பிரித்தானியாவின் நிகர குடியேற்றம் கடந்த 12 மாதங்களில் 77 ஆயிரமாக குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
1997-ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவிலான நிகர குடியேற்றத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் குறிக்கின்றன.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின்படி, இந்தக் காலகட்டத்தில் மதிப்பிடப்பட்ட 7 இலட்சத்து 38 ஆயிரம் பேர் பிரித்தானியாவுக்கு குடியேறியதுடன், 6 இலட்சத்து 61 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் சாராதவர்கள் வேலை அல்லது படிப்புக்காக நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட குறைவே, நிகர குடியேற்றத்தில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து வேலை அல்லது படிப்புக்காக பிரிட்டனுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்ததே இந்தத் தொடர்ச்சியான சரிவுக்குக் காரணம் என தேசிய புள்ளியியல் அலுவலக கூறியுள்ளது .
2025-ஆம் ஆண்டு முதல், அரசாங்கம் புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. திறமையான தொழிலாளர்களுக்கான கடுமையான ஊதியம் மற்றும் ஆதரவாளர் சரிபார்ப்புகள், ஆங்கில மொழித் தேவைகள், மற்றும் சில புலம்பெயர்ந்தோர் தங்களது குடும்ப உறுப்பினர்களை பிரிட்டனுக்கு உடன் அழைத்து வருவதைக் கடினமாக்குதல் ஆகியவை அவற்றில் அடங்கும்.
செப்டெம்பர் 2026 வரையான ஓராண்டில் வழங்கப்பட்ட பணி விசாக்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 16% குறைந்துள்ளது.
அதே காலகட்டத்தில் நிதியுதவி அளிக்கப்பட்ட கல்வி விசாக்களின் எண்ணிக்கை 23 % குறைந்துள்ளது .
இதேநேரம் சட்டவிரோத குடியேற்றமும் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.














