சீன நகரமான ஷங்காய், கொரோனா தொற்றுக்களால் தொடர்ந்து தடுமாறி வருவதால், 100 தொன் உலர்ந்த யாக் இறைச்சி மற்றும் 3,000 தொன் குடிநீர் உள்ளிட்ட ‘தொற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள்’ திபெத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டன.
ஷங்காயில் 2,494 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு 16,407 அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன என்று சின்ஹுவா தெரிவித்துள்ளது.
திபெத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட உணவுப்பொருட்கள் உள்ளிட்டவை சீன அரசாங்கத்தின் வழிகாட்டிலின் கீழ் வழங்கப்பட்டன. சீனாவின் ஜிலின் மாகாணத்திற்கு மொத்தம் 5,000 தொன் குடிநீர் வழங்கப்பட்டதாக திபெத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரேனா பரவலலுடன் போராடும் சீனாவின் கிழக்கு பெருநகரம் மற்றும் வடகிழக்கு மாகாணம் ஆகியவற்றுக்காக இந்த உதவிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு கூறியுள்ளது.
திபெத்திய மதிப்பாய்வின்படி, இவ்வளவு பெரிய அளவிலான இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதைத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தீவிர பௌத்த மத சிந்தனைகளைக் கொண்ட சீனா அதனை செய்யா நன்கொடைகளைப் பெற்றமை அவர்களுக்கு அவமதிப்பாகும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
கொரோனாவின் முதல் அலையினால் சீனா பாதிக்கப்பட்டபோது திபெத்திய மூலிகை மருந்து நன்கொடைகள் அனுப்பப்பட்டன.
திபெத்திய கலாசாரம் மற்றும் அடையாளத்தை சீனா தொடர்ந்து ஒடுக்கி வருவதோடு, சீன நிர்வாகம் கடுமையான சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.