யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவரை யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் வரவேற்றார். இதன்போது மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டார்.
வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர் பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.