ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டத்திற்கு பலரும் தமது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று காலி முகத்திடல் போராட்டக்களத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி மேதினக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி, கருப்பு கொடிகளை ஏற்றி, செந்நிற ஆடையணிந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோசமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.