அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 25ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது.
சர்வமத தலைவர்கள், இளைஞர் – யுவதிகள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள், பல்கலைகழக மாணவர்கள்,தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், நேற்றைய தினமும் பாரியளவான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியான உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






