மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத வெல்லாவெளி – வக்கி எல்லை பிரதான வீதிகள் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் போக்குவரத்துச்செய்வதில் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்ட குறித்த வீதியை நீண்டகாலமாக புனரமைத்துதருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த நிலையிலும் அதனை புனரமைக்க யாரும் நடவடிக்கையெடுக்காத நிலையில் போரதீவுப்பற்று பிரதேச சபையினால் குறித்த வீதியை தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லா வெளியிலிருந்து அம்பாறைக்குச் செல்லும் வக்கிஎல்லை (சுனுனு)பிரதான வீதியானது நீண்ட நாட்களாக இந்த வீதியின் ஊடாக கல் மண் ஏற்றிச் செல்கின்றமையினால் வீதியானது குண்டும் குழியுமாக உடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இவ் வீதியினை புனரமைத்துதருமாறு நீண்டகாலமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அரசியல்வாதிகளிடம் முறையிட்ட போதும் யாரும் கவனிக்காத நிலையிலும் பல தடவைகள் ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தியும் இதற்கான தீர்வினை யாரும் வழங்காத நிலையியே காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
மழைகாலங்களில் வீதி தார் ரோட் சேர் பூசிய வீதியாக நீர் நிரம்பி காணப்படும் நிலையேற்படுவதனால் வீதிஊடாக பயனம் செய்யும் போது பாடசாலை மாணவர்கள்,விவவசாயிகள்,கர்ப்பினி தாய்மார்கள்,முதியோர்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வீதி ஊடாக அரசு பேருந்து வாகனங்கள் தனியார் பேருந்துகள் முச்சக்கர வண்டிகள் செய்கின்றமையினால் உhயி நேரத்துக்கு பாடசாலைக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் செல்வது மற்றும் நோயாளிகள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதில் தாமதங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இன்று போரதீவுப் பற்று பிரதேச சபையினால் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் பாறை கல் தூசிகள் மூலம் வீதியினை பிரதேசசபை கனரக வாகனங்களின் உதவியுடனும் பிரதேசத்தில் உள்ளவர்களிடம் உள்ள கனரக வாகன உதவிகளுடன் செப்பனிடும் பணிககள் முன்னெடுக்கப்படுகின்றது.
போரதீவுப்பற்று பிரதேச சபை தொழிநூட்ப உத்தியோகஸ்தர் இந்திரவர்மண் மேற்பார்வையின் மூலம் மற்றும் பிரதேசசபை ஊழியர்கள் உதவியுடன் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.