இந்திய அரசாங்கம் இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்திலும் அதிகாரப்பரவலாக்கல் விடயத்திலும் எந்தவித அழுத்ததினையும் முன்வைக்காதது வேதனையான விடயம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பல உதவிகளை இலங்கை மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இனமதபேதம் பாராமல் இந்திய அரசாங்கம் வழங்கிவருவது பாராட்டுக்குரியதென்றாலும் வடக்கினைப்பொறுத்தவரையில் இந்திய அரசாங்கம் கூடுதலான உதவிகளையும் கிழக்கில் என்ன உதவி செய்துள்ளார்கள் என்று கேள்விகேட்ககூடிய சூழ்நிலையுமே காணப்படுகின்றது.
இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு அழுத்தத்தினை இலங்கை அரசாங்கத்திற்கு ஏன் இந்திய அரசாங்கம் வழங்கவில்லையென்ற கேள்வி மக்களிடம் எழுத்துள்ளது.
தமது ஆட்சியில் மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு இந்த ஆட்சியில் உள்ளவர்கள் பதவி விலகுவேதே இன்றைய சூழலுக்கு ஏற்றவிடயமாகும்.