மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தனியார் ரான்போட் கம்பனி ஒன்றில் முற்றுகையிட்ட பொலிசார் வியாபாரத்துக்கா பரல் மற்றும் தண்ணிர் தாங்கியில் பதுக்கிவைக்கப்பட்டடிருந்த 1510 லீற்றர் டீசலுடன் ஒருவரை நேற்று (செவ்வாய்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சிரேஷ்ட பொலிலிஸ் அத்தியட்சகர் சுகதபாலவின் ஆலோசனைக்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நயனசிறியின் வழிகாட்டடில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி உமர் பள்ளிவாயல் வீதியிலுள்ள குறித்த கம்பியினை சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் போது அங்கு 7 பரல்கள் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றில் 1510 லீற்றர் டீசலை வியாபாரத்துக்காக பதுகிகிவைத்திருந்த நிலையில் ஒருவரை கைது செய்ததுடன் பமுக்கிவைவத்திருந்த டீசலை மீட்டுள்ளர்.
குறித்த எரிபொருளை தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்து கொண்டுவந்து பதுக்கி வைத்திருந்ததாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி பகுதியில் வியாபாரத்துக்காக பதுக்கி வைத்திருந்த 135 லீற்றர் டீசலுடன் ஒருவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது