மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகங்களை பொது சுகாதார அதிகாரிகள் நேற்று திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன் போது இரண்டு பிரிவுகளாக பொது சுகாதார அதிகாரிகள் உணவங்களை முற்றுகையிட்டனர் .
இதன் போது பாவனைக்கு உதவாத அரசி மூடைகளை கைப்பற்றியுள்ளதுடன் சுகாதாரமற்ற முறையில் செயற்பட்டுவந்த பல கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உதயகுமார் தெரிவித்தார்.
சுகாதாரமற்ற முறையில் பல உணவங்கள் செயற்பட்டுவந்ததை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கையும் இதன்போது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறும் அதேவேளை சுகாதாரம் பேனப்படாது மனித பாவணைக்கு உதவாத உணவுகளை விற்பனை உணவகங்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உதயகுமார் தெரிவித்தார்.