பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வரும் பொது மக்கள் மீது அரச தரப்பிலிருந்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுவருவதை ஒருபோதும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஜே.வி.பியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருன் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற முன்னாள் ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறினார் என்றால் பின்கதவால் ஆட்சிப்பொறுப்பேற்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம்சிங்கவை வீட்டுக்கு அனுப்பவும் மக்கள் தயாராக இருக்கின்றனர் என குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அமைதியான போராட்டத்தின்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் ககைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் பொதுமக்களை அரசாங்கம் ஒடுக்க முற்பட்டால் பாரிய அழவிலான போராட்டங்கள் மீண்டும் ஆரம்பமாவதற்கும் அரசாங்கம் வழிவகுக்காமல் நேர்மையான மக்களது கோரிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்