சர்வதேச அமைப்புகளின் நலன்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச சமூகம் எப்பொழுதும் எமது நாட்டை பலவீனமான நிலைக்கு தள்ளவே முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக உலகையே எதிர்த்துப் போராடக் கூடிய தலைவர் ஜனாதிபதியாகிவிட்டார் என்றும் அவரைக்கண்டு உலக நாடுகள் அஞ்ச வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
எனவே நாட்டு மக்கள் அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டத்தில் உடன்படுமாறு தொடர்ந்தும் வலியறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போல் 2048ஆம் ஆண்டுக்குள் இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த முடியும் என வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.