உக்ரேனிய அதிகாரிகள், கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்து நடத்திய எதிர் தாக்குதலின் மூலம் தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்துவருவதாக அறிவித்துள்ளனர்.
சமீபத்திய நாட்களில், உக்ரைனின் இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுத்தது, ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கார்கிவ் பிராந்தியத்தில் மீட்டெடுக்கப்பட்ட 8,000 சதுர கிமீ பிரதேசத்தை தனது படைகள் பலப்படுத்தி வருவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.